பணகுடி:
பணகுடியை அடுத்த அழகப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் குணசீலன் மகள் துர்கா ரதி பிருந்தா (வயது 17). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துர்கா ரதி பிருந்தா வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.