சேலம் மாவட்டத்தில் புதிதாக 44 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-12-02 20:54 GMT
சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், புதிதாக 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 1,437 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 41 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்