26 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரி நிரம்பியது கிடா வெட்டி ஊர் பொதுமக்கள் வழிபாடு

28 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரி நிரம்பியது. பொதுமக்கள் கிடா வெட்டி வழிபாடு நடத்தினார்கள்.

Update: 2021-12-02 20:46 GMT
சேலம்,
சேலம் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரி சுமார் 57 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. ஆனால் இந்த பகுதியில் சரிவர மழை இல்லாததால் ஏரி நிரம்பாமல் இருந்து வந்தது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தற்போது வீராணம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. 26 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் அங்குள்ள விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதை கொண்டாடும் வகையில் நேற்று ஏரியில் கிடா வெட்டி பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. 
மேலும், ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீரில் பொதுமக்கள் அனைவரும் பூக்களை தூவி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில், வீராணம் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி, அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிராஜிதீன் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்