இட்டமொழி அருகே பரிதாபம் காதல் மனைவி பிரிந்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2021-12-02 20:00 GMT
இட்டமொழி:
இட்டமொழி அருகே காதல் மனைவி பிரிந்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கூலி தொழிலாளி
நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே கடையன்குளம் மேல தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவருடைய மகன் சுரேஷ் கண்ணன் (வயது 33). கூலி தொழிலாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோர்ட்டில் விவாகரத்து பெற்று இருவரும் சமீபத்தில் பிரிந்தனர்.
தற்கொலை
மனைவி பிரிந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்த சுரேஷ் கண்ணன் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று சுரேஷ் கண்ணன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோன்ஸ் பிரேம்லால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்