குடிபோதையில் கார் ஓட்டிய வாலிபர் கைது
குடிபோதையில் கார் ஓட்டிய வாலிபர் கைது
வேலூர்
வேலூர் வடக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வேலூர் புதிய பஸ்நிலையம் செல்லியம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், டிரைவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த மூர்த்தி மகன் ராஜி (வயது 26) என்று தெரிய வந்தது. அதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.