இருளர் குடும்பங்களுக்கு சுகாதார பெட்டகம்
இருளர் குடும்பங்களுக்கு சுகாதார பெட்டகம்
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 600 சுகாதார பெட்டகம் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஓச்சேரியை அடுத்த மேலபுலம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இருளர் இனத்தைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு சுகாதார பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி சுகாதார பெட்டகத்தை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், தாசில்தார் ரவி உள்பட பலர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து மேலபுலம்புதூர் எம்.ஜி.ஆர். நகரில் மழைநீரோடு கழிவுநீர் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து மிகவும் துன்படுவதாக பொதுமக்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர். அந்தப்பகுதியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.