கொல்லிமலையில் 10 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது
கொல்லிமலையில் 10 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது
சேந்தமங்கலம்:
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் தின்னனூர் நாடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 19). அதே பகுதியில் 10 வயது சிறுமி தனது பாட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தாள். இந்த நிலையில் வெங்கடேஷ், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இந்த மிரட்டலுக்கு பயந்து தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி வெளியில் சொல்லாமல் இருந்தாள். இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியிடம் கேட்டபோது அவள் தனக்கு நடந்த கொடுமையை கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து கொல்லிமலையில் உள்ள வாழவந்தி நாடு போலீசில் புகார் செய்தனர்.
இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்ததில் வெங்கடேசன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து வெங்கடேசை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.