மனைவியை விஷம் கொடுத்து கொல்ல முயன்றவர் கைது

தாராபுரம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை விஷம் கொடுத்து கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2021-12-02 17:10 GMT
தாராபுரம்
தாராபுரம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை விஷம் கொடுத்து கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டிரைவர்
தாராபுரம் அருகே ரஞ்சிதாபுரத்தை சேர்ந்த திருமலைசாமி மகன் காளிமுத்து (வயது 37). பொக்லைன் டிரைவர். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த மல்லிகா (32) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு காளிமுத்து குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மல்லிகா கோபித்துக் கொண்டு தாயார் வீ்டான திண்டுக்கல் அய்யம்பாளையத்துக்கு சென்றுவிட்டார். பிறகு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மல்லிகா ரஞ்சிதாபுரத்துக்கு வந்துள்ளார்.
கொல்ல முயற்சி
அப்போது கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அதில் காளிமுத்து ஆத்திரமடைந்து மல்லிகா வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி உள்ளார். இதனால் மல்லிகா கூச்சல் போட்டு அலறினார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது தன்னை காளிமுத்து விஷத்தை ஊற்றி கொல்ல முயன்றதாக கூறினார். சிறிது நேரத்தில் அங்கேயே அவர் மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் மல்லிகாவை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட் டது. பின்னர் அலங்கியம் போலீசில் கணவர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரில் கணவர் காளிமுத்து வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறியிருந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குக்குப்பதிவு செய்து காளிமுத்துவை கைது  செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்