ரெயில்வே சுரங்க பாதையில் தேங்கிய நீரில் சிக்கிய அரசு ஜீப்

போடி அருகே ரெயில்வே சுரங்க பாதையில் தேங்கிய நீரில் அரசு ஜீப் ஒன்று சிக்கி கொண்டது.

Update: 2021-12-02 16:54 GMT
போடி: 


போடி அருகே உள்ள சன்னாசிபுரம் பகுதிக்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் 3 பேர்  நேற்று காலை ஒரு ஜீப்பில் ஆய்வுக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்க பாதை வழியாக அவர்கள் சென்றனர். அந்த சுரங்க பாதையில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி நின்றது. தண்ணீர் குறைவாக இருப்பதாக நினைத்து டிரைவர் ஜீப்பை சுரங்கப்பாதையில் ஓட்டினார். சிறிது தூரம் சென்றவுடன் ஜீப் தண்ணீரில் மூழ்க தொடங்கியது. ஜீப்பில் இருந்த அதிகாரிகள் மழைநீரில் சிக்கி கொண்டனர். உடனே சம்பவ இடத்திற்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கயிறு கட்டி ஜீப்பை மீட்டனர். அதில் இருந்த அதிகாரிகளும் பத்திரமாக வெளியே வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்