பாதயாத்திரை செல்வதற்காக போடப்பட்ட காங்கிரீட் சாலை உடைப்பு

தாராபுரம் அருகே பழனி பாத யாத்திரை செல்வதற்காக போடப்பட்ட காங்கிரீட் சாலையை தனியார் சிலர் உடைத்து அதன் மீது மண்கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-12-02 16:44 GMT
தாராபுரம்
தாராபுரம் அருகே பழனி பாத யாத்திரை செல்வதற்காக போடப்பட்ட காங்கிரீட் சாலையை தனியார் சிலர் உடைத்து அதன் மீது மண்கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதயாத்திரை செல்லும் காங்கிரீட் சாலை
 தாராபுரம்- பழனி செல்லும் சாலையில் ஒரு ஓரமாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.  இந்த  காங்கிரீட் சாலையை சில தனியார் நில உரிமையாளர்கள் உடைத்து மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி கட்டிடம் வளாகம் முழுவதும் மழைநீர் வெளியேற முடியாமல் குளம் போல் தேங்கியது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர்  தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
இது குறித்து பா.ம.க. திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ. ரவிச்சந்திரன் தாராபுரம் தாசில்தார் சைலஜா மற்றும் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவி செல்வி ஆகியோரிடம் புகார் தெரிவித்தார்.  உடனே சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்து ஆய்வு  செய்தனர். அப்போதும் தனியார்  உடைக்கப்பட்ட நடைபாதை மீது மண் கொட்டும் பணியை தொடர்ந்து செய்தனர். 
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு 
அதன் பிறகு முறைகேட்டில் ஈடுபட்டு வந்த நபர்கள் நாளை (இன்று) மாலை 5 மணிக்கு தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர் ரஞ்சித், இதனைத் தொடர்ந்து அங்கு 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்