பலத்த மழைக்கு இடிந்து விழுந்த வீடு

வேடசந்தூர் அருகே பலத்த மழைக்கு வீடு இடிந்து விழுந்தது.

Update: 2021-12-02 16:36 GMT
வேடசந்தூர்

வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் பெருமாள்கோவில்பட்டியில் சின்னகாமுதேவர் என்பவரின் தோட்டத்து வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 

அப்போது வீட்டுக்குள் இருந்த சின்னகாமுதேவர், அவருடைய மனைவி பெருமாயி ஆகியோர் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறி விட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.  இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்