சின்னசேலத்தில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை;
சின்னசேலம்,
சின்னசேலம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் சேதமடைந்த சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் நேற்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் சேதமடைந்த சாலைகளை சீரமைத்தனர்.