மழையால் சாக்பீஸ் உற்பத்தி கடும் பாதிப்பு
சாணார்பட்டி அருகே மழையால் சாக்பீஸ் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.;
கோபால்பட்டி
சாணார்பட்டி அருகே உள்ள வத்தலத்தோப்பம்பட்டியில் பள்ளி, கல்லூரிகளில் கரும்பலகையில் எழுத பயன்படும் சாக்பீஸ் தயாரிப்பு தொழில் குடிசைத்தொழில் போல நடந்து வருகிறது. கிழங்குமாவை பயன்படுத்தி, அதற்கான எந்திரங்கள் மூலம் சாக்பீஸ் உற்பத்தி செய்யப்படுகிறது.
பின்னர் அவை பெட்டிகளில் அடைக்கப்பட்டு திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 100 சாக்பீஸ்கள் உள்ள ஒரு பெட்டி ரூ.25-க்கு மொத்தவிலைக்கு விற்கப்படுகிறது.
தொடர்மழை காரணமாக சாக்பீஸ் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் உற்பத்தி செய்த சாக்பீஸ்களை, வெயிலில் உலர வைக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர்.
கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் அந்த தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில், தற்போது மழையினால் மீண்டும் சாக்பீஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது