ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது

ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது

Update: 2021-12-02 16:15 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள தேவரடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார்(வயது 39). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவில் கிணத்துக்கடவில் இருந்து ஆட்டோவில் தேவரடிபாளையம் நோக்கி சென்றார். அங்கு செல்லும் வழியில் உள்ள ரெயில்வே பாலம் அருகே ஒரு நபர் திடீரென ஆட்டோவை மறித்தார். 

பின்னர் சசிகுமாரை தகாத  வார்த்தையால் திட்டி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த சசிகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சசிகுமார் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சசிகுமாரை தாக்கிய கோவிந்தகவுண்டனூர் பகுதியை சேர்ந்த பிரீத்திவிராஜா(38) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்