வீடு புகுந்து திருடிய பெண் கைது

வீடு புகுந்து திருடிய பெண் கைது

Update: 2021-12-02 16:14 GMT
நெகமம்

நெகமம் அருகே மூட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வி. இவர் சம்பவத்தன்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றார். அதற்கு முன்னதாக சாவியை பக்கவாட்டில் உள்ள ஜன்னலில் வைத்தார். அப்போது அங்கு காணியாலாம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி லட்சுமி(வயது 43) வந்தார். பின்னர் ஜன்னலில் இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே நுழைந்தார். தொடர்ந்து பீரோவில் இருந்த ரூ.1,500-ஐ திருடினார். 

இதற்கிடையில் செல்வி மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு வீட்டுக்குள் லட்சுமி திருட்டில் ஈடுபட்டு கொண்டு இருப்பதை ஜன்னல் வழியாக கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்து நெகமம் போலீசில் ஒப்படைத்தார். அவரை கைது செய்த போலீசார், திருடிய பணத்தை மீட்டனர்.

மேலும் செய்திகள்