பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

கூட்டேரிப்பட்டில் பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.;

Update: 2021-12-02 16:04 GMT
மயிலம், 

கூட்டேரிப்பட்டு தபால் நிலையம் பின்புறம் ஐஸ்வரியம் நகர் உள்ளது. இந்த நகருக்கு செல்லக்கூடிய பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, வேலி அமைத்து இருந்தார். இதனால் அந்த நகர் மக்கள் வீட்டிற்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டனர். இது தொடர்பாக மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமனிடம் மனு கொடுக்கப்பட்டது. 
இதையடுத்து அவர், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி கூட்டேரிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அருணா திவாகர், இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி மற்றும் போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. 

மேலும் செய்திகள்