ஏரல், மங்கலகுறிச்சி ரோடு பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

ஏரல், மங்கலகுறிச்சி ரோடு பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2021-12-02 15:44 GMT
ஏரல்:
ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் கீழமங்கலகுறிச்சி பாலம் அருகில் ஸ்ரீவைகுண்டம் வாய்க்காலில் இருந்து ரோட்டுக்கு தென்புறம் உள்ள பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள தார் ரோட்டில் நேற்று மதியம் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை விதித்தார். ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி வழியாக சிவகளை, நெல்லை செல்லும் வாகனங்கள்,  பண்டாரவிளை, சாயர்புரம் வழியாக தூத்துக்குடி செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் பாலலட்சுமி மற்றும் சாலைப் பணியாளர்கள் சிவகணேஷ், பாக்கியராஜ், முத்துகிருஷ்ணன் ஆகியோர் பாலத்தின் விழுந்த பள்ளத்தை பொக்லைன் எந்திரம் மூலம் தற்காலிகமாக சாலையை சீரமைத்தனர். அந்த வழியாக மாலை 6 மணிக்கு மேல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் அந்த சாலையில் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்