அச்சரப்பாக்கம் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

அச்சரப்பாக்கம் அருகே சிறுவன் யுவன்ராஜ் குட்டையில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

Update: 2021-12-02 12:03 GMT
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், புளியணி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வ கேது. இவரது மகன் யுவன்ராஜ் (வயது 12). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர், நேற்று அங்குள்ள குட்டையில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இதையறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யுவன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பி.கே. பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்