மெட்ரோ ரெயிலில் 6 மாதத்தில் 1.30 கோடி பேர் பயணம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுபாடுகளில் அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் சேவை கடந்த ஜூன் 21-ந்தேதி முதல் தொடங்கியது.

Update: 2021-12-02 08:38 GMT
அப்போது தொடங்கி கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை 6 மாதத்தில் 1 கோடியே 30 லட்சத்து 55 ஆயிரத்து 833 பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து கடந்த 30-ந்தேதி வரை மட்டும் மொத்தம் 29 லட்சத்து 24 ஆயிரத்து 148 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். அதிகபட்சமாக கடந்த மாதம் 25-ந்தேதி 1 லட்சத்து 31 ஆயிரத்து 177 பயணிகள் பயணம் செய்தனர்.

மேற்கூறிய தகவல்களை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்