மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-12-01 19:09 GMT
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமாருக்கு மாட்டு வண்டியில் சிலர் மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது. அவர், இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தம்பாடி பாப்பாத்தி அம்மன் கோவில் ஓடையில் இருந்து மாட்டுவண்டியில் மணல் அள்ளி கடத்தி வந்த 2 பேரை மடக்கிப் பிடிக்க போலீசார் முயன்றனர். ஆனால், போலீசாரை கண்டவுடன் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு இருவரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்