மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது

Update: 2021-12-01 19:04 GMT
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி மணி (வயது 60). இவர் நேற்று மாலை இலந்தங்குழி ஜெமின்பேரையூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ரோட்டு ஓரத்தில் நின்று கொண்டிருந்த மணியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை குன்னம் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்