ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்த கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 200 பேருக்கு தடுப்பூசி
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் ேபசியதாவது:-
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. நமது மாவட்டம் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக இருப்பதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் முழுமையாக ஈடுபட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 200 பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் செந்தில், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.