ஊருக்குள் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு

ஊருக்குள் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு

Update: 2021-12-01 18:01 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அலசந்தாபுரம் கிராமத்தில் ஊர் நுழைவு பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊருக்குள் புகுந்து கோழியை விழுங்கியுள்ளது. பின்னர் அங்கிருந்து நகர முடியாமல் இருந்த அந்த மலைப்பாம்பை கண்டு கிராம மக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கொடுத்தும் வனத்துறையினர் வராத காரணத்தால் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ரமேஷ் என்பவர் கிராம மக்களின் உதவியுடன் 15 அடி நீளமுள்ள அந்த மலைபாம்பை லாவகமாக பிடித்து அவர்களே அருகே உள்ள வனப்பகுதிக்கு எடுத்து சென்று கற்பூரம் ஏற்றி வணங்கி பாம்பை விட்டனர்.

அந்த கிராமத்திற்குள் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மலைப்பாம்பு வருவதாகவும், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வருவதில்லை என்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் செய்திகள்