சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி போக்சோவில் கைது;

Update:2021-12-01 23:15 IST
பரமத்திவேலூர், டிச.2-
பரமத்திவேலூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் துரைசாமி (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது‌ சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ‌‌‌‌‌‌கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி துரைசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது‌ செய்து‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்