மோகனூர்:
நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 74). இவர் அங்குள்ள தனியார் கோழிப்பண்ணை தீவன ஆலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்து தீவன ஆலைக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ேமாகனூர் அருகே அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அவருடைய மகள் விமலா மோகனூர் போலிசில் கொடுத்த புகாரின்பேரில், போலிஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.