வடகாட்டில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்; போக்குவரத்து துண்டிப்பு
தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்; போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வடகாடு:
வடகாட்டில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் வழியில் உள்ள அய்யனார் கோவில் அருகே செட்டிகுளம் உள்ளது. இக்குளத்திற்கு அம்புலி ஆற்று தண்ணீர் சூரன்விடுதி வழியாக வடகாடு எல்லை அருகே இரட்டை மடை பகுதியில் பிரிந்து, அய்யனார் கோவில் அருகேயுள்ள கலிங்கியில் விழுந்து செட்டிகுளம் சென்றடையும். மற்றொன்று மாங்குளத்தை நிரப்பி கொத்தமங்கலம் அம்புலி ஆற்றை சென்றடையும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு ஆர்ப்பரித்து வந்த மழை நீரானது நேற்றிரவு வடகாடு தெற்குப்பட்டியில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் வழியில் உள்ள செட்டிகுளம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், ஒரு சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடந்து சென்று கொண்டுள்ளனர்.