கால்வாயில் சிக்கியவர்கள் கயிறு கட்டி மீட்பு

சோளிங்கர் அருகே ஓடை கால்வாயில் சிக்கிய 4 பேர் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.;

Update: 2021-12-01 17:38 GMT
சோளிங்கர்

சோளிங்கர் அருகே ஓடை கால்வாயில் சிக்கிய 4 பேர் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.
கயிறுகட்டி மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த நந்திமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் 2 கால்வாய்கள் மூலம் செல்கிறது. இதன் இரண்டு கால்வாய்களுக்கு மத்தியில் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த சந்திரன் (வயது 67), காசியம்மாள் (45) ஆகியோர் குடிசை அமைத்து தங்கி வேலை பார்த்து வந்தனர். 

ஓடைக்கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் நேற்று முன்தினம் இரவு வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர். அதே போன்று நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த சத்யா (35), சாய்ராம் (17) ஆகியோரும் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சோளிங்கர் தாசில்தார் வெற்றி குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் த.செல்வம் தலைமையில் 6 வீரர்கள் நேற்று காலை விரைந்து சென்று அவர்கள் 4 பேரையும் கயிறு கட்டி மீட்டனர்.

மேலும் 8 ஆடுகள் மற்றும் இரண்டு குட்டிகளையும் மீட்டனர். தகவலறிந்த சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஏ.எம்.முனிரத்தினம் நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

முகாமில் தங்கவைப்பு

மேலும் அவர்களை முகாமில் தங்க வைத்து உணவு வழங்க வருவாய் துறைக்கு அறிவுறுத்தினார். ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், ஒன்றிய கவுன்சிலர் ராமன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா நரசிம்மன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், உதவி அலுவலர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்