இடத்தை சீரமைக்க சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
இடத்தை சீரமைக்க சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தை அடுத்த காமராஜபுரம் பாலாற்றங்கரை அருகில் கட்டப்பட்டு இருந்த வீடுகள் அண்மையில் பெய்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முடினாம்பட்டு பகுதியில் அரசு 50 சென்ட் இடம் ஒதுக்கி உள்ளது. அந்த இடத்தை அதிகாரிகள் சீரமைக்க சென்றனர். தகவல் அறிந்த அந்த ஊர் மக்கள் வெளியூர் நபர்களைத் தங்கள் ஊருக்குள் குடியமர்த்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
அப்போது உதவி கலெக்டர் த
னஞ்செயன், கே.வி.குப்பம் தாலுகா இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, குடியாத்தம் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார், தாசில்தார் சரண்யா உள்ளிட்ட வருவாய் துறையினர் அவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து ஊர்மக்கள் கலைந்து சென்றனர்.