கோட்டை மாரியம்மன் கோவிலில் மீண்டும் தங்கத்தேரோட்டம்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மீண்டும் தங்கத்தேரோட்டம் தொடங்கியது.
முருகபவனம்:
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் முக்கிய விசேஷ நாட்கள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தங்கத்தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் தொற்று காரணமாக, தங்கத்தேரோட்டம் நடத்தப்படுவது ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மீண்டும் தங்கத்தேரோட்டம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத் துறை தற்போது அனுமதி அளித்துள்ளது.
இதையொட்டி நேற்று இரவு 7 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன்பிறகு தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோட்டை மாரியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க, தங்கத்தேர் கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தது.
இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த தங்கத்தேரோட்டம், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.