மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வீட்டு மனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
வேடசந்தூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார்.
மாவட்ட குழு உறுப்பினர்கள் அருள்செல்வம், முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் மலைச்சாமி, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடமதுரை ஒன்றியத்தில் அரசு புறம்போக்கு நிலம், சாலையோரத்தில் குடிசை அமைத்து வசிக்கிற அனைவருக்கும் பட்டா வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் அவர்கள் மனு கொடுத்தனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், வேடசந்தூர் அம்பேத்கர் சிலையில் இருந்து மார்க்கெட் சாலை வழியாக ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர்.