மேல்மலையனூரில் மர்மநோய் தாக்கி கால்நடைகள் சாவு

மேல்மலையனூரில் மர்மநோய் தாக்கி கால்நடைகள் சாவு

Update: 2021-12-01 16:43 GMT
மேல்மலையனூர்

மேல்மலையனூரைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் நடராஜன்(55). ஆடு, மாடுகள் வளர்த்து வரும் இவர் நேற்று மாட்டுக்கொட்டகையில் சென்று பார்த்தபோது பசுமாடு, 2 கன்றுக்குட்டிகள், 2 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவைகள் மர்ம நோய் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதே போல் சுற்றுப்புற கிராமங்களிலும் மர்ம நோய் தாக்கி ஆடு, மாடுகள் இறந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக கால்நடைகளை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்