தூத்துக்குடியில் பெண்ணிடம் முக நூலில் பழகி நகை, பணம் மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடியில் பெண்ணிடம் முக நூலில் பழகி நகை, பணம் மோசடி செய்தவர் கைது

Update: 2021-12-01 15:42 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பெண்ணிடம் முகநூலில் பழகி நகை, பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மோசடி
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் ராஜா (வயது 31). இவர் சமூக சமத்துவ படை கட்சி நிர்வாகியாக உள்ளார். இவர் கோவில்பட்டியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவருடன் முகநூலில் பழகி உள்ளார். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி உள்ளார்.
அந்த பெண்ணிடம் இருந்து 37 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை வாங்கி கொண்டு மோசடி செய்து ஏமாற்றினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைது
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் மேற்பார்வையில், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி ராஜாவை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்