தூத்துக்குடி அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு;
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி கவிதா (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் வேலைக்கு சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். சீனிவாசா நகர் 1-வது தெருவில் சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென கவிதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.