வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-12-01 15:22 GMT
காங்கேயம், 
காங்கேயம் அருகே கல்லாங்காட்டுவலசை சேர்ந்த விஸ்வநாதன்  மகன் சீனிவாசன் (வயது32). திருமணமான இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சீனிவாசனுக்கு குடிப்பழக்கம் இருந்து, அதிலிருந்து மீளமுடியாமல் மன உளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படும் சீனிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 
இதுகுறித்து காங்கேயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காங்கேயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்