கேரள மாநிலம் மூணாறுக்கு அரசுபஸ் போக்குவரத்து தொடங்கியது

கேரள மாநிலம் மூணாறுக்கு அரசுபஸ் போக்குவரத்து தொடங்கியது

Update: 2021-12-01 14:09 GMT
உடுமலை, 
உடுமலையில் இருந்து கடந்த 18 மாதங்களுக்குப்பிறகு கேரள மாநிலம் மூணாறுக்கு அரசுபஸ் போக்குவரத்து தொடங்கியது.
மூணாறு
உடுமலையில் இருந்தும் மற்றும் கோவையில் இருந்து உடுமலை வழியாகவும் கேரள மாநிலம் மூணாறுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பஸ்கள் கடந்த 18மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.அதன்படி உடுமலையில் இருந்து மூணாறுக்கும், கோவையில் இருந்து உடுமலை வழியாக மூணாறுக்கும் இயக்கப்பட்டுவந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்களும் மூணாறுக்கு இயக்கப்படாமலிருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு, தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு அரசுபோக்குவரத்துக்கழக பஸ்களை இயக்கும்படி, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம்  உத்தரவிட்டது.
பஸ் போக்குவரத்து தொடங்கியது
இதைத்தொடர்ந்து உடுமலை கிளை தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழகபஸ் நேற்று காலை 6.30 மணிக்கு உடுமலை மத்திய பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு மூணாறுக்கு சென்றது. பின்னர் அங்கிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு உடுமலைக்கு வந்து, இங்கிருந்து புறப்பட்டு பழனிக்கு சென்று திரும்பியது. இதேபோன்று கோவையில் இருந்தும் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ் புறப்பட்டு உடுமலை வழியாக மூணாறுக்கு சென்று திரும்பியது. இந்த பஸ்கள் அரசின் உத்தரவுப்படி தொடர்ந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்