தாய் கண்முன்னே பலியான பரிதாபம்: லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- சிறுவன் சாவு

செங்குன்றம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் தாய் கண்முன்னே பரிதாபம் உயிரிழந்தார்.

Update: 2021-12-01 06:19 GMT
செங்குன்றம், 

சென்னை கே.கே.நகர் இரட்டை டேங்க் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமையன். இவருடைய மனைவி தேவி (வயது 46). இவர்களுடய மகன் தனுஷ் வரன் (16). இந்தநிலையில், தனுஷ்வரனும், அவருடைய தாய் தேவியும் மோட்டார் சைக்கிளில் புழலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, புழல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் கதிர்வேடு அருகே வந்தபோது, பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற தனுஷ்வரன் தாய் கண் முன்னே பரிதாபமாக செத்தார். பலத்த காயமடைந்த தேவி சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அகமது காதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்