பெரியகுளம் கண்மாய் கரையில் உடைப்பு
சிவகாசி பகுதியில் தொடர்மழையினால் பெரியகுளம் கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது.
சிவகாசி,
சிவகாசி பகுதியில் தொடர்மழையினால் பெரியகுளம் கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது.
தொடர் மழை
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழையால் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பல கண்மாய்கள் நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிவகாசி தாலுகாவில் யூனியனுக்கு சொந்தமான 32 கண்மாய்களும், பொதுப் பணித்துறைக்கு சொந்தமாக 24 கண்மாய்கள் என மொத்தம் 56 கண்மாய்கள் உள்ளது.
இதில் திருத்தங்கல் பெரியகுளம், புதுக் கோட்டை ஆகிய கண்மாய் கள் உள்பட 19 கண்மாய்கள் 75 சதவீதம் நிரம்பி உள்ளது. தாயில் பட்டி, பேர்நாயக்கன்பட்டி உள்பட 20 கண் மாய்கள் 50 சதவீதத்துக்கு மேல் நிரம்பி உள்ளது. சிவகாசியில் மதியம் 13 மணிக்கு பின்னரும் மழை விட்டு, விட்டு பெய்ததால் அதிகளவில் கண்மாய்களுக்கு தண் ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் தாலுகாவில் உள்ள 75 சதவீத கண் மாய்கள் நிரம்ப வாய்ப்பு இருப்பதாக சிவகாசி தாசில்தார் ராஜ்குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, தொடர் மழை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் தாலுகா முழுவதும் 36 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதில் 32 வீடுகளுக்கு ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 200 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. அதே போல் 5 ஆடுகள் இறந் துள்ளது. இதன் உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங் கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் வருவாய்த்துறை அலுவலர்களை கொண்டு தாலுகா முழுவ தும் உள்ள நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழையால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கரையில் உடைப்பு
திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆனைக்குட்டம் அணைக்கு செல்கிறது. இதில் அதிவீரன்பட்டி-சுக்கிரவார்பட்டி இடையே பெரியகுளம் கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. உடனே அப்பகுதி மக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் தாசில்தார் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மணல் மூடைகளை வைத்து கரையை சீரமைக்க உத்தரவிட்டார். பஞ்சாயத்து துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம் முன்னிலையில் கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்றது.