தென்காசியில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் இருக்காது
இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் இருக்காது;
தென்காசி:
தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாமிரபரணி குடிநீர் திட்டம் மற்றும் குற்றாலம் குடிநீர் மூலமாக தென்காசி நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளப் பெருக்கினால் மின்மோட்டார் இயக்குவதில் சிரமம் உள்ளது. எனவே இன்றும், நாளையும் (புதன்கிழமை, வியாழக்கிழமை) தென்காசி நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.