வீடு புகுந்து பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை

தக்கலை அருகே வீடுபுகுந்து பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2021-11-30 20:34 GMT
குழித்துறை:
தக்கலை அருகே வீடுபுகுந்து பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
 மாணவிக்கு பாலியல் தொல்லை
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு கேரளபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், பொக்லைன் எந்திரம் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 
சம்பவத்தன்று இவர், பிளஸ்-1 படிக்கும் மாணவியின் தாயார் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் மாணவியிடம், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர், இதுகுறித்து யாரிடமும் செல்லக்கூடாது என கூறி மிரட்டிவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது.  
கைது
பின்னர், வீட்டுக்கு திரும்பிய தாயாரிடம் மாணவி இதுபற்றி கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

மேலும் செய்திகள்