திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.31¾ லட்சம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.31¾ லட்சம் கிடைத்தது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 35 நிரந்தர உண்டியல்கள் உள்ளன.இந்த நிலையில் கந்தசஷ்டி திருவிழா மற்றும் திருக்கார்த்திகை திருவிழா அடுத்தடுத்து நிறைவு பெற்றதை தொடர்ந்து இந்த மாதத்திற்கான உண்டியல்கள் திறப்பு நேற்று நடைபெற்றது.கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி, உதவி ஆணையர் விஜயன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், ஸ்கந்தகுரு வித்யாலயா வேத சிவாகம பாடசாலை மாணவர்கள் மற்றும் அய்யப்ப சேவா சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு பணம், தங்கம், வெள்ளி என்று ரகம் பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் ரூ.31 லட்சத்து 83 ஆயிரத்து 150-ம் கிடைத்தது. மேலும் 198 கிராம் தங்கமும், 3.290 கிராம் வெள்ளியும் கிடைத்தது. நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கண்காணிப்பாளர் நாகவேல், திருப்பரங்குன்றம் கோவில் சூப்பிரண்டுகள் பாலாஜி, பாலலெட்சுமி, துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், பேஷ்கார் புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.