தந்தையை தாக்கிய மகனுக்கு வலைவீச்சு

தந்தையை தாக்கிய மகனுக்கு வலைவீச்சு

Update: 2021-11-30 20:27 GMT
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள காரி சாத்தான் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசாமி (வயது 61). இவருடைய மனைவி வீரம்மாள். இவர்களது மகன் மாரிச்சாமி, கடையநல்லூர் அருகே உள்ள மாவடிகால் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரம்மாள் இறந்தார். நேற்று முன்தினம் நடந்த விஷேச நிகழ்ச்சிக்கு வந்த மாரிச்சாமி, சொத்து பிரச்சினையில் விவசாயத்திற்கு களை எடுக்கப் பயன்படும் "களை கொத்தி" கருவியால் சண்முகசாமி தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த சண்முகசாமி சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிச்சாமியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்