ஸ்கூட்டர் திருடிய வாலிபர் கைது

தக்கலை அருகே ஸ்கூட்டர் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-30 20:14 GMT
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே ஸ்கூட்டர் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஸ்கூட்டர் திருட்டு
தக்கலை அருகே உள்ள வேர்கிளம்பி வட்டவிளையை சேர்ந்தவர் அனிஸ்ஜெஸ்டஸ் (வயது 24). இவர் அந்த பகுதியில் சிமெண்டு செங்கல் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர், தனது தாயாரின் ஸ்கூட்டரில் குன்னம்பாறை பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். 
அங்கு கடையின் வெளியே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பொருட்கள் வாங்கிய பின்பு, திரும்பி வந்து பார்த்து பார்த்த போது, அங்கு நிறுத்தியிருந்த ஸ்கூட்டார் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தர்.
வாலிபர் கைது
இதுகுறித்து அனிஸ்ஜெஸ்டஸ் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். 
அப்போது, ஒரு வாலிபர் ஸ்கூட்டரை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி தக்கலை அருகே புலிப்பனம் பகுதியை சேர்ந்த சஜீவன்ராஜ் (22) என்ற வாலிபரை நேற்று கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ஸ்கூட்டரையும் மீட்டனர்.

மேலும் செய்திகள்