சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-11-30 19:30 GMT
அரியலூர்:
அரியலூரில் உள்ள மாவட்ட சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு அரியலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சைமன் தலைமை தாங்கினார். பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டங்கள் நடத்திய சுகாதார ஆய்வாளர்களை கைது செய்ததை கண்டித்தும், அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்