கீழப்பழுவூர்:
விவசாயி
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிகுழி கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 40). இவர் ஆடுகள் வளர்த்து வந்ததோடு, விவசாயமும் செய்து வந்தார்.
இந்நிலையில் இவர் ஆடுகளுக்கான தீவனத்திற்காக குச்சியில் அரிவாளை கட்டி, வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்தில் தழைகளை பறித்துள்ளார். அந்த குச்சி ஈரமாக இருந்ததாக தெரிகிறது.
சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற மின்கம்பி மீது குச்சி பட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.