ஓடையில் பிணமாக மிதந்த மூதாட்டி

ஓடையில் மூதாட்டி பிணமாக மிதந்தார்.

Update: 2021-11-30 19:30 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் உள்ள நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி ராமாயியுடன் பெரம்பலூர் மருத்துவமனை செல்வதற்காக மொபட்டில் வந்தபோது, குரும்பலூர் மூல காட்டில் இருந்து பெரிய ஏரிக்கு செல்லும் ஓடையில் ஒரு மூதாட்டி பிணமாக மிதந்ததை கண்டு பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன், இறந்து கிடந்த மூதாட்டி தனது உறவினரான நல்லம்மாள்(வயது 80) என்று தெரிவித்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 28-ந்தேதி முதல் காணாமல் போயிருந்ததாகவும் நடராஜன், போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்