மாநில அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் மனித சங்கிலி
மாநில அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்;
கரூர்
மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தும் மாநில அரசு அதன் விலையை குறைக்காததை கண்டித்து கரூர்-கோவை சாலையில் கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில் நாதன் தலைமை வகித்தார். ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் ராயனூர் ரவி, அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் மதுகுமார், மாவட்ட தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.