தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அதிக அளவில் கோமாரி நோய் தாக்குகிறது. இதனால் கால்நடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர். எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராயப்பன், மருவத்தூர், பெரம்பலூர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் ஊராட்சி முழுவதும் உள்ள கால்நடைகளுக்கு தொடர் மழை காரணமாக கால் மற்றும் வாய்ப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதி கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்துபவர்கள் கவலையடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ், முள்ளூர், புதுக்கோட்டை.
பாழடைந்த ஊழியர்கள் குடியிருப்பு
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்து உபயோகமற்ற நிலையில் உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதாரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உப்பிடமங்கலம், கரூர்.
பழுதடைந்த சிமெண்டு சாலை
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு மணத்தட்டை கடைத்தெரு சிமெண்டு சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையையொட்டியுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மணத்தட்டை, கரூர்.
தவறாக எழுதப்பட்டுள்ள ஊர் பெயர்
திருச்சி மாவட்டம், ஜெயங்கொண்டம் துளாரங்குறிச்சி பகுதியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள, பெயர்ப்பலகையில் இடையார் என்ற பெயருக்கு பதில் இடையூர் என்று தவறாக பதியப்பட்டுள்ளது. இதனால் புதிதாக விலாசம் தேடி வருபவர்கள் விலாசம் தெரியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆசைத்தம்பி, இடையார், அரியலூர்.
நாய்களால் பொதுமக்கள் அச்சம்
அரியலூர் நகரில் நூற்றுக்கணக்கான நாய்கள் சுற்றிவருகின்றன. அவைகளை பிடிக்கக்கூடாது என்று வன பாதுகாப்பு சட்டம் கூறியுள்ளதால் நாய் பெருக்கம் அதிகமாகி விட்டது. நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க நகராட்சி மூலம் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு வந்தது. தற்போது அது போன்ற நடவடிக்கை எடுக்கப்படாததால் எங்கு பார்த்தாலும் நாய்கள் சுற்றி வருகின்றன. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வரும் நிலை உள்ளதோடு, இந்த நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளை நாயின் மீது விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
எரியாத உயர் கோபுர மின் விளக்கு
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் அரசுமருத்துவமனை, பஸ் நிறுத்தம், அரசுமேல்நிலைப்பள்ளி, கோவில், அரசு அலுவலகங்கள், வங்கிகள், கடைகள், குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் அரசு மருத்துவமனை அருகே உயர் கோபுர மின் விளக்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விளக்கு வாரக்கணக்கில் எரியாமல் உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இலுப்பூர், புதுக்கோட்டை.
சேறும், சகதியுமான சாலை
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், காமரசவல்லி கிராமத்தில் உள்ள காலனி தெருவில் முறையான சாலை, வடிகால் வசதி இல்லாததால் மண் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வயதானவர்கள் இந்த சாலையில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காமரசவல்லி, அரியலூர்.
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
திருச்சி மாவட்டம் ,பிச்சாண்டார்கோவில் ஊராட்சி, நெ.1 டோல்கேட் அருகில் கோகுலம் காலனியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தங்கமணி, நெ.1 டோல்கேட், திருச்சி.
வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?
திருச்சி மாநகராட்சி 29-வது வார்டு ஆண்டாள்நகர் விஸ்தரிப்பு பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆண்டாள் நகர், திருச்சி.
சாலையில் படுத்திருக்கும் மாடுகள்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர்-தஞ்சை மெயின் ரோட்டில் இரவு நேரங்களில் மாடுகள் அதிக அளவில் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் படுத்திருக்கும் மாடுகளை கவனிக்காமல் அதன் மீது மோட்டார் சைக்கிளை விட்டால் காயம் அடையவும், உயிரிழக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அப்துல் ரஹ்மான், காட்டூர், திருச்சி.
நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து காலை 9:40 மற்றும் இரவு 7:30 ஆகிய நேரங்களில் அரசு பஸ் புறப்பட்டு லால்குடி, அகலங்கநல்லூர் வழியாக நெய்க்குப்பை வரையும், காலை 5:30 மணிக்கு லால்குடியிலிருந்து புறப்பட்டு அலங்கநல்லூர் வழியாக நெய்க்குப்பை வரையும் ஒரு பஸ் இயக்கப்பட்டு வந்தது. சாலை பணியால் நிறுத்தப்பட்ட இந்த பஸ் போக்குவரத்து சாலை பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், லால்குடி, திருச்சி.
அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?
திருச்சி மாவட்டம், லால்குடி ஆங்கரை பாலாஜிநகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை, வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், லால்குடி, திருச்சி.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர், வெங்கடேஸ்வரா நகர், வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம், ஐஸ்வர்யா எஸ்டேட் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் சாலையின் நடுவில் குழிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதித்து மூடப்பட்டன. அப்போது அவை சரியாக மண் கொட்டி மூடப்படாததால், தற்போது, மழை பெய்து சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அத்துடன் குழி தோண்டிய இடம் பள்ளமாக இருப்பதாலும், அதில் மழைநீர் தேங்கி இருப்பதாலும் அந்த சாலையில் வாகனங்களில் செல்ல முடியவில்லை. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் தினமும் அவதி அடைந்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச்செல்லவும், அவசர தேவைக்கும் ஆட்டோக்கள், வேன்கள் அப்பகுதிக்கு வருவதில்லை. ஆம்புலன்ஸ் வாகனம் இந்த பகுதிக்கு வரமுடிவதில்லை. எனவே பாதாள சாக்கடைக்காக குழி தோண்டிய இடங்களில் கான்கிரீட் கலவை கொட்டி சாலையை செப்பனியிட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜலட்சுமி, கொட்டப்பட்டு, திருச்சி.