மர்ம காய்ச்சலுக்கு 2 மாணவிகள் பலி

மர்ம காய்ச்சலுக்கு 2 மாணவிகள் உயிரிழந்தனர்.

Update: 2021-11-30 17:45 GMT
கீழக்கரை, 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவிக்கும், புதுத்தெருவை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவிக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. 
2 பேரும் கீழக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்‌. இருவருக்கும் பரிசோதனை செய்ததில் எந்த காய்ச்சல் என்று தெரியவில்லை. காய்ச்சல் குறையாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனின்றி 2 மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஒரே நாளில் 2 மாணவிகள் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தது கீழக்கரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில் “கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால் காலதாமதமாகி இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே கீழக்கரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை வசதிகளை மேம்படுத்த வேண்டும். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை போர்்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்