விழுப்புரத்தில் சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-11-30 16:01 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை விழுப்புரம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பிருதிவிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்வாணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்க மாவட்ட தலைவர் சங்கர், பொது சுகாதாரத்துறை சங்க மாவட்ட தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில முன்னாள் துணை பொதுச்செயலாளர் அருணகிரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், மருத்துவத்துறை நிர்வாக செயலாளர் அசோகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்க துணைத்தலைவர் முருகன், மருத்துவம்சாரா மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன், பல்நோக்கு பணியாளர்கள் சங்க செயலாளர் கதிரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

கொரோனா காலங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை சுகாதார ஆய்வாளர்களாக நிரந்தர சம்பளம் அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சுகாதாரத்துறை சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் 1,600 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயசங்கர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்