திருப்பூர்,
திருப்பூர் அங்கேரிப்பாளையத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவருடைய வீட்டுக்கு அருகே வசிக்கும் எலெக்ட்ரீசியன் ஜெகநாதன் (45) என்பவர் அந்த பெண்ணை கேலிகிண்டல் செய்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவர் தகராறு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகநாதனை கைது செய்தனர்.